4,468 Reviews ● 1,304 Films/Shows ● 58 Top Critics
37 Languages ● And Growing!

/images/members/srinivasan-r.jpg

Srinivasan R

Ananda Vikatan

Srinivasan R. is a Chennai-based journalist, film critic, and editorial leader with over 14 years of progressive experience across digital media and broadcast journalism. Currently serving as the Chief Digital Content Editor at Ananda Vikatan, he handles content strategy for the website and serves as a jury member for the prestigious Vikatan Cinema Awards.

A versatile multimedia critic, Srinivasan regularly scripts and anchors the popular movie review show for Cinema Vikatan. Over his career, he has conducted high-impact bilingual interviews with prominent industry personalities, including filmmakers and actors such as Vidhu Vinod Chopra, Sriram Raghavan, Manoj Bajpayee, and Vijay Sethupathi. He holds a degree in Visual Communication alongside a certification in Writing for TV from the Al Jazeera Media Institute.

All reviews by Srinivasan R

Image of scene from the film Disclosure Day
Director:Steven Spielberg
Cast:Emily Blunt, Josh O'Connor, Colin Firth, Colman Domingo, Eve Hewson, Wyatt Russell, Elizabeth Marvel, Henry Lloyd-Hughes, Michael Gaston, Gabby Beans

Disclosure Day

Science Fiction, Thriller, Action (English)

ஏலியன்ஸ் குறித்த ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறாரா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்?

Tue, June 16 2026

என்பதாக டிவி சேனலில் அரங்கேறும் அந்த இறுதி அத்தியாயம் அட்டகாசமான திரை அனுபவம்! இதைத்தான் ஹாலிவுட் கடந்த சில வருடங்களாக மிஸ் செய்ததோ?!

சயின்ஸ் பிக்ஷன் - ஏலியன்ஸ் காம்போவில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் என்றாலே அதற்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏலியன்கள் குறித்து அவர் எடுத்த ‘Close Encounters of the Third Kind’, ‘E.T. (Extra Terrestrial), ‘War of the Worlds’ என அனைத்துமே இன்றுவரை கிளாசிக்காகக் கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட தன் ஃபேவரைட் ஜானருக்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்! உலகமே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்திலிருக்க, ‘வார்டெக்ஸ்’ (Wartex) என்ற நிறுவனத்தின் ரகசிய, பாதுகாக்கப்பட்ட கோப்புகளையும், ஒரு மர்மமான கருவியையும் திருடிவிடுகிறார் அந்நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டியில் பணியாற்றும் டேனியல் கெல்னர் (ஜாஷ் ஓ’கானர்). அவரை அந்நிறுவனத்தின் சிஇஓ (காலின் ஃபிர்த்), தன் படைகளுடன் துரத்த, தன் காதலியுடன் தப்பி ஓடுகிறார் கெல்னர்.

Continue Reading…


Image of scene from the film Warrant
Director:Vignesh Natarajan
Cast:Prashanth Pandiraj, Balaji Sakthivel, Kaali Venkat, Kausalya, Aruldoss, MV Namritha, Aruljothi Arockiaraj, Chaya Devi, Vaiyapuri, Meena
Writer:Prashanth Pandiraj, Vignesh Natarajan

Warrant

Crime, Mystery, Drama (Tamil)

தொடருக்கே உரிய டிரேட்மார்க் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன், டார்க் ஹியூமர் ஆகியவற்றைத் தாண்டி, தன்னைக் கடவுளாக நினைக்கும் தலைவன், கண்மூடித்தனமாக அவனை நம்பும் ஆதரவாளர்கள் என இன்றைய அமெரிக்க அரசியலை நையாண்டி செய்தவிதம் சிறப்பு.

Tue, June 9 2026

பல்வேறு அரசுப் பணிகளுக்கு முயன்ற பிறகு வேறு வழியில்லாமல் காவல்துறைக்கு வருகிறார் கோட்டை கருப்பசாமி (பிரசாந்த் பாண்டிராஜ்). காவல் நிலையத்தின் பரபரப்பான சூழல், அங்கிருக்கும் நடைமுறைகள் அவருக்குப் புதிதாக இருப்பதால், அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதிலும் அவருக்குச் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு தருணத்தில் பிடிபட்ட ஒரு திருடன், அவரைத் தாக்கிவிட்டுத் தப்பித்துவிடுகிறான். அதனால் பிரச்னைகளுடன் சேர்த்து கேலிகளையும் சந்திக்கிறார். அதன் பிறகு பழைய வழக்கு கோப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு வாரண்ட்' டூட்டி போடப்படுகிறது. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை அவர் கண்டுபிடித்தாரா, காவல் நிலையத்தில் கேலி செய்தவர்கள் முன்பு தன்னை நிரூபித்தாரா என்பதை எட்டு எபிசோடுகளில் சொல்கிறது இந்த `ஜீ5’ சீரீஸ்.

Continue Reading…


Image of scene from the film The Mummy
Director:Lee Cronin
Cast:Jack Reynor, Laia Costa, May Calamawy, Natalie Grace, Shylo Molina, Billie Roy, Veronica Falcón, Hayat Kamille, May Elghety, Emily Mitchell
Writer:Lee Cronin

The Mummy

Horror, Mystery (English)

Sat, May 30 2026

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படத்தொடர்களில் ஒன்றான `தி மம்மி'-யை 2017-ல் டாம் க்ரூஸை வைத்து ரீபூட் செய்தது ஹாலிவுட். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு `மம்மி'. `ஈவில் டெட் ரைஸ்' இயக்குநர் லீ குரோனின் இந்த முறை `மம்மி'யை சாகசப் படமாக அணுகாமல் முழு நீள ஹாரர் படமாக மாற்றியிருக்கிறார். இந்த `மம்மி' டெரர் காட்டுகிறதா?

எகிப்தின் கைரோவில் டிவி நிருபராக பணியாற்றுகிறார் சார்லி கேனன் (ஜேக் ரெய்னோர்). மனைவி லரிசா (லையா கோஸ்டா), மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஒருநாள் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மகள் கேட்டி காணாமல் போகிறாள். எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், சார்லியின் குடும்பம் மெக்ஸிக்கோவுக்கு மாற்றலாகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு கேட்டி கிடைத்துவிட்டாள் என்ற செய்தி எகிப்திலிருந்து வருகிறது. ஆனால் இப்போதிருக்கும் கேட்டி சுயநினைவின்றி மனநலச் சிக்கலோடு இருக்கிறாள். உண்மையில் கேட்டிக்கு என்ன நடந்தது, அவளால் வரும் ஆபத்துகள் என்ன என்பதை ஹாரர் விருந்தாக முன்வைக்கிறது படம்.

Continue Reading…


Image of scene from the film Nukkad Naatak
Director:Tanmaya Shekhar
Cast:Molshri, Shivang Rajpal, Danish Husain, Nirmala Hajra, Lalit Saw, Monita Sinha, Mayank Shandilya, Kishore Kumar, Jay DeYonker
Writer:Tanmaya Shekhar

Nukkad Naatak

Drama (Hindi)

Thu, May 7 2026

உயரிய கல்வி நிறுவனம் ஒன்றில் பொறியியல் படிக்கும் ஷிவாங்கும் மோல்யும் நண்பர்களாக இருக்கின்றனர். கல்லூரியின் நாடகக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மோல், சமூக விழிப்புணர்வு சார்ந்த பல நாடகங்களை அரங்கேற்றிப் பரிசுகளை அள்ளுகிறார். இவர்கள் படிக்கும் கல்லூரியில் இருக்கும் உணவகத்தில் பணிபுரியும் ஒருவரை, அவருடைய முதலாளி கடுஞ்சொற்களால் திட்டுகிறார். இதனால் கோபமடையும் ஷிவாங்கும் மோல்யும், அவருக்கு உதவி செய்யத் திருட்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். இதைக் கண்டுபிடிக்கும் கல்லூரி நிர்வாகம், அவர்களைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றக் கடிதம் அனுப்புகிறது. ஆனால் கல்லூரியின் இயக்குநர், “குடிசைப்பகுதியில் வாழும் ஐந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால், மீண்டும் கல்லூரிக்குள் சேர்ப்போம்” என நிபந்தனை விதிக்கிறார். அதன் பிறகு இந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள், மீண்டும் கல்லூரியில் இவர்கள் சேர்க்கப்பட்டார்களா, இவர்கள் கற்பிக்கும் பாடம் என்ன என்பதுதான் இயக்குநர் தன்மயா சேகர் இயக்கியிருக்கும் இந்த நெட்ஃபிளிக்ஸ் சினிமாவின் கதை.

Continue Reading…


Image of scene from the film Patriot
Director:Mahesh Narayanan
Cast:Mammootty, Mohanlal, Fahadh Faasil, Kunchacko Boban, Nayanthara, Revathi, Zarin Shihab, Rajiv Menon, Darshana Rajendran, Renji Panicker
Writer:Mahesh Narayanan

Patriot

Thriller, Action (Malayalam)

யார் தேசத்துரோகி, யார் தேசபக்தர்? - இதைத் தீர்மானிப்பது யார்?

Thu, May 7 2026

“வெளியில் நடப்பதைப் பார்க்க ஜன்னல் அமைத்தான். ஆனால், இன்று அந்த ஜன்னல் வழியே அவனே கண்காணிக்கப் படுகிறான்’’ என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் ஒலிக்கிறது ‘பேட்ரியாட்’ படத்தின் ‘மனுஷ்யன்’ பாடல். கிட்டத்தட்டப் படத்தின் சாரமும் இதுதான். நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அதை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளே, மக்களை வேவு பார்க்கும் ஆபத்தை எடுத்துரைக்கிறது இந்த மலையாளப் படம். மத்திய அமைச்சர் ஜே.பி.சுந்தரத்தின் (ராஜீவ் மேனன்) மகன் சக்தி சுந்தரம் (பகத் பாசில்), தன் `சக்தி’ மென்பொருள் நிறுவனத்தின் மூலம் ஒருவருடைய போன், லேப்டாப்பில் நுழைந்து அவர்களை உளவு பார்க்கும் ‘பெரிஸ்கோப்’ என்ற ஸ்பைவேரைக் கண்டுபிடிக்கிறார். சட்டத்துக்குப் புறம்பான அதை அதிக அளவில் பயன்படுத்த, சக்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறது மத்திய அரசு. இந்த ஸ்பைவேரின் அடுத்தகட்டமாக மக்களுக்கு ‘சோஷியல் ஸ்கோர்’ என்ற ரேங்கிங்கையும் கொண்டுவரத் திட்டமிடுகிறார்கள். இதைத் தடுக்க முயலும் மத்திய அமைச்சர் நளினியும் (ரேவதி), சக்தி சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் ஜோதியும் (தர்ஷனா) சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழக்க, பிரச்னையைக் கையிலெடுக்கிறார் இந்தியப் பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கும் டேனியல் ஜேம்ஸ் (மம்மூட்டி). ஆனால், அவர் மீதே தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட, வெளிநாட்டுக்குத் தப்பியோடவேண்டிய சூழல். சாமானியர்களைக்கூடக் காவு வாங்கும் இந்த ஸ்பைவேரையும், அமைச்சர் ஜே.பி.சுந்தரத்தையும், சக்தி சுந்தரத்தையும் டேனியல் எப்படி வீழ்த்தினார் என்பதே ‘பேட்ரியாட்.’

Continue Reading…


Latest Reviews

Image of scene from the film Pradhama Drishtiya Kuttakkar
FCG Rating for the film Pradhama Drishtiya Kuttakkar: 68/100
Pradhama Drishtiya Kuttakkar

Thriller, Drama (Malayalam)

Follows a woman constable who joins the police force through appointment after the death of her… (more)

Image of scene from the film About an Intimate Matter
About an Intimate Matter

Drama (Bengali)

Swarna is a dedicated high school science teacher who relocates to a conservative suburban town with… (more)

Image of scene from the film Khoriya
Khoriya

Drama (Nepali)

Two Nepali half-brothers run a poultry farm on the outskirts of a city. The older brother… (more)

Image of scene from the film Reporting Live
FCG Rating for the film Reporting Live: 36/100
Reporting Live

Crime, Thriller (Hindi)

A young reporter and her reluctant cameraman chase a story, only to get entangled in an… (more)