4,468 Reviews ● 1,304 Films/Shows ● 58 Top Critics
37 Languages ● And Growing!

/images/members/srinivasan-r.jpg

Srinivasan R

Ananda Vikatan

Srinivasan R. is a Chennai-based journalist, film critic, and editorial leader with over 14 years of progressive experience across digital media and broadcast journalism. Currently serving as the Chief Digital Content Editor at Ananda Vikatan, he handles content strategy for the website and serves as a jury member for the prestigious Vikatan Cinema Awards.

A versatile multimedia critic, Srinivasan regularly scripts and anchors the popular movie review show for Cinema Vikatan. Over his career, he has conducted high-impact bilingual interviews with prominent industry personalities, including filmmakers and actors such as Vidhu Vinod Chopra, Sriram Raghavan, Manoj Bajpayee, and Vijay Sethupathi. He holds a degree in Visual Communication alongside a certification in Writing for TV from the Al Jazeera Media Institute.

All reviews by Srinivasan R

Image of scene from the film The Odyssey
Director:Christopher Nolan
Cast:Matt Damon, Tom Holland, Anne Hathaway, Robert Pattinson, Lupita Nyong'o, Charlize Theron, Zendaya, Benny Safdie, Jon Bernthal, John Leguizamo
Writer:Christopher Nolan

The Odyssey

Adventure, Action, Fantasy (English)

Thu, July 30 2026

உலக சினிமாவின் பெருங்கரையை பேரிரைச்சலுடன் கடந்த தி ஒடிஸி' அலை, இன்னும் நின்றபாடில்லை. நேர விளையாட்டுகளின் மாய வித்தகன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், இந்த முறை ஹோமரின் கிரேக்க புராணமான ஒடிஸி’யைத் தன் திரைமொழியில் பிரமாண்ட திரையனுபவமாக மாற்றியிருக்கிறார். நடிகர்கள் தேர்விலேயே சர்ச்சைகள் கிளம்ப, தனி மனித சாகசமாக நீளும் ஒரு புராணத்தைப் போருக்கு எதிரான பெருங்காப்பியமாக மாற்றியிருக்கிறார் நோலன். அதீத பொருட்செலவைக் கோரும் ஐமேக்ஸ் 70மி.மீ படச்சுருள் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட இதை நிச்சயம் பெரிய திரையில் காண வேண்டும் என்பதே நோலனின் கோரிக்கை! ஐமேக்ஸ் 70 மி.மீ திரையரங்குகள் இல்லாத இந்தியாவில், அதைவிடக் குறைந்த தொழில்நுட்பத்தில் காணவும் கூட்டம் அலைமோதியது நோலனுக்காக மட்டுமே!

Continue Reading…


Image of scene from the film Pritam and Pedro
Director:Amir Satyaveer Singh, Avinash Arun
Cast:Vir Hirani, Arshad Warsi, Vikrant Massey, Mona Singh, Rajesh Sharma, Mohit Chauhan, Shruti Marathe, Naina Sareen, Satyadeep Misra, Harshika Kewalramani

Pritam and Pedro

Crime, Drama, Mystery (Hindi)

OTT Corner

Thu, July 16 2026

தனது டிரேட் மார்க் நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடிப்பால் அர்ஷத் வார்ஸி கவர, அறிமுக நடிகர் வீர் ஹிரானியும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வில்லனாக விக்ராந்த் மாஸேவும், சிறு வேடத்தில் போமன் இரானியும் ஈர்க்கின்றனர். சைபர் குற்றங்களை எந்தவிதமான சிக்கலான தொழில்நுட்ப வார்த்தைகளுமின்றி, நகைச்சுவையும் மனித உணர்வுகளையும் கலந்து, அனைவருக்கும் எளிமையாகப் புரியும்படி கொடுத்திருக்கிறது இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தலைமையிலான எழுத்தாளர் குழு. ஆனால், சீரியஸான குற்றப் பின்னணியில் நகைச்சுவையை அதிகம் திணித்திருப்பது சில இடங்களில் கதையின் தீவிரத்தைக் குறைக்கிறது. ஆங்காங்கே எழும் லாஜிக் கேள்விகளையும் மறந்தால், ராஜ்குமார் ஹிரானி டெம்ப்ளேட்டில் ஓர் உணர்வுபூர்வமான பொழுதுபோக்குத் தொடர் இது!

Continue Reading…


Image of scene from the film Isakapatnam
Director:Garry BH
Cast:Aishwarya Rajesh, Samuthirakani, Sunil Varma, Naresh Agastya, Merin Philip, Sudhakar Komakula, Rajiv Kanakala, Mime Gopi, Rohini, Raja Chembolu
Writer:Prashanth Babu Ragathi

Isakapatnam

Drama (Telugu)

OTT Corner

Thu, July 16 2026

அதிகாரவெறி பிடித்தவராக சமுத்திரக்கனியும், ஆழமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். ஆனால் சுனில் கதாபாத்திரம் முற்றிலும் வீணடிக்கப்பட்ட உணர்வையே உண்டாக்குகிறது. 80-களின் துறைமுக நகரத்தை நம்பகத்தன்மையுடன் கண்முன் நிறுத்தும் கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு தொடருக்குப் பெரும் பலம். தந்தை - மகள் இடையேயான முரண்பாடுகளும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் ஆங்காங்கே திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கின்றன. ஆனால், தொடரின் ஆன்மாவாக இருக்க வேண்டிய இந்தக் காட்சிகள் குறைவாக இடம்பெற்றிருப்பது வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதோடு எந்தவிதப் புதுமையுமின்றி மெதுவாக நகரும் திரைக்கதை, எளிதில் யூகிக்கக்கூடிய திருப்பங்கள் தொடரின் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. முன்னணி நடிகர்களின் எதார்த்த நடிப்பு மட்டுமே இந்த இசாகப்பட்டினத்தைக் கரைசேர்க்கிறது.

Continue Reading…


Image of scene from the film Muthassi
Director:Nandulal M S
Cast:K.P.A.C Leela, Amith Chakalakkal, Akhila Bhargavan, Orhan Hyder
Writer:Nandulal M S

Muthassi

Mystery (Malayalam)

OTT Corner

Thu, July 16 2026

கேரளத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு சபிக்கப்பட்ட கிராமத்தில் வசிக்கும் ராஜனை (அமித் சக்கலக்கல்) மணந்து, அந்த ஊருக்கு மருமகளாக வருகிறார் லீலா (அகிலா பார்கவன்). அவர்களின் வீட்டிலேயே வசிக்கும் முத்தச்சி (கே.பி.ஏ.சி.லீலா), ஒரு முன்னாள் சூனியக்காரி என்பதால் அவரின் அமானுஷ்ய நடவடிக்கைகள் லீலாவை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. இதற்கிடையே லீலாவுக்கு ஒரு மகன் பிறக்க, அவனை முத்தச்சியின் குணமும் அமானுஷ்யமும் பின்தொடர்வதாக உணர்கிறார் லீலா. முத்தச்சியின் முன்கதை என்ன, அந்தச் சிறுவன் அவரைப்போலவே மாறினானா, தாயாக லீலா எடுக்கும் முடிவு என்ன என்பதே இந்த ஜி5 மலையாள ஹாரர் சீரீஸின் கதை.

Continue Reading…


Image of scene from the film Enola Holmes S03
Director:Philip Barantini
Cast:Millie Bobby Brown, Henry Cavill, Helena Bonham Carter, Louis Partridge, Himesh Patel, Sharon Duncan-Brewster, Hattie Morahan, Susan Wokoma, Joe Azzopardi, Nicholas Aaron
Writer:Jack Thorne

Enola Holmes S03

Adventure, Crime, Mystery (English)

OTT Corner

Wed, July 8 2026

எனோலா ஹோல்ம்ஸாக மில்லி பாபி பிரவுன், மீண்டும் ஒரு முறை அந்த வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷெர்லாக்காக ஹென்றி கேவில்லுக்கு அதிக வேலை இல்லை. பிற கதாபாத்திரங்கள் தேவையான அளவு பங்களிப்பைத் தந்துள்ளனர். ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் ஆகியவை காலப் பயணம் செய்யவைக்கின்றன. ஆனால், அடுத்தடுத்து இருவர் காணாமல்போயும், யார் காரணம் என்று கண்டறியப்பட்ட பிறகு வரும் அந்தக் காதல் காட்சி படத்தைச் சோர்வடையச் செய்கிறது. முழுமையடையாத காட்சிகள், தொக்கி நிற்கும் கதாபாத்திரங்கள், படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இருந்தும் விசாரணைக் காட்சிகள் படத்தைக் கரை சேர்க்கின்றன.

Continue Reading…


Image of scene from the film Voicemails for Isabelle
Director:Leah McKendrick
Cast:Zoey Deutch, Nick Robinson, Ciara Bravo, Nick Offerman, Leah McKendrick, Harry Shum Jr., Lukas Gage, Toby Sandeman, Tanis Dolman, Gil Bellows
Writer:Leah McKendrick

Voicemails for Isabelle

Romance, Comedy, Drama (English)

OTT Corner

Wed, July 8 2026

118 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை லியா மெக்கெண்ட்ரிக் இயக்கியிருக்கிறார். தங்கையின் போன் நம்பருக்கு வாய்ஸ் மெயிலில் பேசும்போதும், காதலன் வெஸ்ஸின் (நிக் ராபின்சன்) அன்புக்கு ஏங்கும்போதும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஜோயி டாய்ச். ஆனால், ஒருகட்டத்தில் மையக்கதையிலிருந்து திரைக்கதை விலகி அந்தரத்தில் தொங்குகிறது. ஐபோனில் வாய்ஸ்மெயில் அனுப்பும் ஜில், அந்த நம்பர் வேறு ஒருவரிடம் இருப்பதுகூடத் தெரியாமல் தன் அந்தரங்கங்களைப் பகிர்வது என்ன லாஜிக்… வீக் எண்டில், ரொமான்ஸ் தேவைப்படுபவர்கள் ஜில்’லுக்கு ஒரு தடவை மட்டும் வாய்ஸ்மெயில்’ அனுப்பலாம்.

Continue Reading…


Image of scene from the film From S04
Cast:Harold Perrineau, Catalina Sandino Moreno, Ricky He, David Alpay, Chloe Van Landschoot, Hannah Cheramy, Pegah Ghafoori, Simon Webster, Elizabeth Saunders, Avery Konrad

From S04

Mystery, Drama, Sci-Fi & Fantasy (English)

OTT Corner

Wed, July 8 2026

போயிடு ஸ்டீவன்ஸாக ஹெரால்டு பெரினோ (Harold Perrineau) தனது உடல் மற்றும் மனரீதியான சோர்வையும், அதிகாரத்தை இழக்கும் வலியையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். புதிய நடிகர்களின் வருகையும், தபிதா, ஜேட் பாத்திரங்களின் அர்ப்பணிப்பான நடிப்பும் தொடருக்குப் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன. முந்தைய சீசன்களைவிட பயத்தையும் உளவியல்ரீதியான அழுத்தத்தையும் இந்த சீசன் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. அதோடு மனித மனங்களின் வீழ்ச்சியையும், நீண்டகாலமாகக் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் தெளிவாகவும் ஆழமாகவும் பதிவுசெய்திருக்கின்றனர். இதுவரை கேள்விகளை மட்டுமே அடுக்கிவந்த திரைக்கதை, முதன்முதலாக பதில்களை அளிக்கத் தொடங்கியிருப்பது நிச்சயம் நல்லதொரு அனுபவமே. கதாபாத்திரங்களின் மனப்போராட்டம், மர்மமான நகரத்தின் பின்னணிக் கதைகள் ஆகியவை திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டி, பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

Continue Reading…


Image of scene from the film Maa Inti Bangaaram
Director:B. V. Nandini Reddy
Cast:Samantha Ruth Prabhu, Gulshan Devaiah, Diganth Manchale, Gautami Tadimalla, Anand, Sreemukhi, Srilakshmi, Manjusha Mukkavilli, Chaitanya Krishna, Srinivas Gavireddy
Writer:Shantharuban Gnanasekaran, Sita Menon, Vasanth Maringanti, Raj Nidimoru

Maa Inti Bangaaram

Action, Thriller, Drama (Telugu)

நல்லதொரு மருமகளாகப் பேர் எடுக்க நினைக்கும் பெண்ணுக்குப் பின்னாலிருக்கும் ஆக்ஷன் பக்கங்களே கதை!

Sat, June 20 2026

ஸ்வர்ணாவை (சமந்தா) காதல் திருமணம் செய்ததால், அனிருத் (திகந்த்) தன் குடும்பத்திடமிருந்து பிரிந்திருக்க வேண்டிய நிலை. மீண்டும் அதில் இணைய ஒரு வாய்ப்பு கிட்ட, அந்தப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் முழுமையான அன்பைப் பெற்று, அந்த வீட்டின் ‘எங்கள் தங்கமாக’ (மா இண்டி பங்காரம்) ஜொலிப்பதை லட்சியமாக ஏற்கிறார் மருமகள் ஸ்வர்ணா. ஆனால் ஸ்வர்ணாவின் இந்த அமைதியான வாழ்க்கைக்குப் பின்னால், ரத்தச் சிவப்பான, வன்முறை நிறைந்த ஒரு இருண்ட முன்கதை இருக்கிறது. பல வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரகசியம், எதிர்பாராத விதமாகக் கொடூரமான வில்லன் கருணாவால் (குல்ஷன் தேவைய்யா) வெளிச்சத்திற்கு வருகிறது. தனது அன்பான குடும்பத்திற்கு வரும் ஆபத்தை ஸ்வர்ணா ஆக்ஷன் மோடில் எப்படிக் கையாண்டார் என்பதே ‘மா இண்டி பங்காரம்’ (தமிழில் ‘எங்கள் தங்கம்’).

Continue Reading…


Latest Reviews

Image of scene from the film Pradhama Drishtiya Kuttakkar
FCG Rating for the film Pradhama Drishtiya Kuttakkar: 68/100
Pradhama Drishtiya Kuttakkar

Thriller, Drama (Malayalam)

Follows a woman constable who joins the police force through appointment after the death of her… (more)

Image of scene from the film About an Intimate Matter
About an Intimate Matter

Drama (Bengali)

Swarna is a dedicated high school science teacher who relocates to a conservative suburban town with… (more)

Image of scene from the film Khoriya
Khoriya

Drama (Nepali)

Two Nepali half-brothers run a poultry farm on the outskirts of a city. The older brother… (more)

Image of scene from the film Reporting Live
FCG Rating for the film Reporting Live: 36/100
Reporting Live

Crime, Thriller (Hindi)

A young reporter and her reluctant cameraman chase a story, only to get entangled in an… (more)