4,468 Reviews ● 1,304 Films/Shows ● 58 Top Critics
37 Languages ● And Growing!

/images/members/srinivasan-r.jpg

Srinivasan R

Ananda Vikatan

Srinivasan R. is a Chennai-based journalist, film critic, and editorial leader with over 14 years of progressive experience across digital media and broadcast journalism. Currently serving as the Chief Digital Content Editor at Ananda Vikatan, he handles content strategy for the website and serves as a jury member for the prestigious Vikatan Cinema Awards.

A versatile multimedia critic, Srinivasan regularly scripts and anchors the popular movie review show for Cinema Vikatan. Over his career, he has conducted high-impact bilingual interviews with prominent industry personalities, including filmmakers and actors such as Vidhu Vinod Chopra, Sriram Raghavan, Manoj Bajpayee, and Vijay Sethupathi. He holds a degree in Visual Communication alongside a certification in Writing for TV from the Al Jazeera Media Institute.

All reviews by Srinivasan R

Image of scene from the film Gandhari
Director:Devashish Makhija
Cast:Taapsee Pannu, Ishwak Singh, Mita Vashisht, Swastika Mukherjee, Chhaya Kadam, Jatin Sarna, Prashant Narayanan, Chandan Roy, Vishwanath Chatterjee, Priti Shroff
Writer:Kanika Dhillon

Gandhari

Action, Drama, Thriller (Hindi)

OTT Corner

Fri, September 18 2026

பானிக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு, அந்தச் சூழலிலும் குழந்தையைத் தேடி ஓடும் கதை சுவாரஸ்ய லைனில் செல்கிறது. குழந்தை கடத்தல் மாஃபியா பற்றிய விவரிப்பும் ஆராய்ச்சியும் படத்துக்கு ஆழமானதொரு நிறத்தைத் தருகின்றன.

பானியும் (டாப்ஸி) அவருடைய கணவரும் ரயிலில் சென்றுகொண்டிருக்கிறார்கள். திடீரென ஜாய்புரா என்ற ஊரில் அவர்களுடைய குழந்தையைக் கடத்திவிடுகிறார்கள். குழந்தையைக் காப்பாற்ற ஓடிச் செல்கையில் பானிக்குத் தலையில் அடிபட்டு கண்பார்வையில் பிரச்னை ஏற்படுகிறது. ஜாய்புராவில் இப்படியான குழந்தைக் கடத்தல் அதிகமாக நடப்பது பற்றியும், அதை நிகழ்த்தும் நெட்வொர்க் பற்றியும் பானி அறிந்துகொள்கிறார். அதன் பிறகு, பார்வைப் பிரச்னை சரியானாலும், பார்வைச் சவால்கொண்டவர் என்றே தனது அடையாளத்தை வைத்துக்கொண்டு ஜாய்புராவில் தங்கி, தன் குழந்தையைத் தீவிரமாகத் தேடுகிறார். இறுதியில் தன் குழந்தையைக் கண்டுபிடித்தாரா, இந்தக் கடத்தல் குழுவின் பின்னணி என்ன, ஜாய்புராவில் அவை எப்படி ஊடுருவியிருக்கின்றன என்கிற முடிச்சுகளை அவிழ்ப்பதே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்திருக்கும் இந்த ‘காந்தாரி’யின் கதை. (தமிழ் டப்பிங் உண்டு).

Continue Reading…


Image of scene from the film Babita Singh Reporting
Director:Ambiecka Pandit
Cast:Nimisha Sajayan, Anshumaan Pushkar, Barun Sobti, Rajesh Kumar, Geetika Vidya, Muskan Arora, Priyanka Setia, Sunita Rajwar
Writer:Amita Vyas

Babita Singh Reporting

Crime, Drama (Hindi)

OTT Corner

Thu, September 10 2026

காவல் அதிகாரியாக இருக்கும் பபிதா சிங் (நிமிஷா சஜயன்) பணியிடத்தில் தன் நலனைப் பார்க்காமல், பிறருக்காகவே ஒவ்வொன்றையும் யோசிக்கிறார். இரண்டு வாரம் விடுமுறை கிடைத்தால், தன் கணவரின் சகோதரியின் வளைகாப்பு நிகழ்வுக்குச் சென்றுவிடலாம் எனத் திட்டமிடுகிறார். ஆனால், விடுப்பு கிடைப்பதிலும் சில சிக்கல்கள் எழுகின்றன. மற்றொரு காவல் அதிகாரி செய்த தவற்றைத் தன்னுடைய தவறென ஒப்புக்கொண்டு இரண்டு வாரம் சஸ்பெண்ட் ஆகிறார் பபிதா சிங். இந்த இடைவெளியில் கணவரின் சகோதரி வளைகாப்புக்காக ஊருக்குச் செல்கிறார் பபிதா சிங். ஆனால், அங்கு பபிதாவின் பள்ளிக்கால நெருங்கிய நண்பர் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவருடைய மரணத்துக்குப் பின்னிருக்கும் காரணங்களை பபிதா சிங் அலசுவதே இந்த பிரைம் வீடியோ படத்தின் கதை.

Continue Reading…


Image of scene from the film Operation Safed Sagar
Director:Oni Sen
Cast:Dia Mirza, Jimmy Shergill, Siddharth, Abhay Verma, Mihir Ahuja, Taaruk Raina, Arnav Bhasin, Prajakta Koli, Adil Hussain, Vinay Pathak

Operation Safed Sagar

Drama (Hindi)

தொடக்கத்தில் த்ரில்லர் சினிமாவாக நகரும் படம், நம்மை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது.

Thu, August 27 2026

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் பின்னணியில், அணு ஆயுதப் போர் மூளும் அபாயத்துக்கு இடையே நடக்கும் அரசியல், ராணுவ மோதல்களைப் பேசும் நெட்ஃபிளிக்ஸ் இந்தித் தொடர் இது. (தமிழ் டப்பிங் உண்டு).

18,000 அடி உயரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலை முறியடிக்க, இந்திய விமானப்படையின் ‘கோல்டன் ஏரோஸ்’ (Golden Arrows) ஸ்க்வாட்ரன் நடத்திய சவாலான வான்வழித் தாக்குதலை விவரிக்கிறது இந்தத் தொடர். ஸ்க்வாட்ரன் லீடர் அஜய் அஹுஜா (சித்தார்த்), விங் கமாண்டர் டோனி (ஜிம்மி ஷெர்கில்) இணைந்து தங்கள் இளம் விமானிகளைப் போருக்கு எப்படித் தயார்படுத்தி வழி நடத்துகிறார்கள் என்பதே இதன் விறுவிறுப்பான மையக்கதை. நிஜப் போர் வீரர்களாக சித்தார்த்தும் ஜிம்மி ஷெர்கிலும் எந்தவிதமான மிகைப்படுத்தலுமின்றி, தங்களின் முதிர்ச்சியான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபாக வினய் பதக், அவரைத் தந்திரமாக இயக்கும் ஜெனரல் முஷாரஃபாக மனு ரிஷி சத்தா ஆகியோரின் நடிப்பும் தொடருக்குப் பெரும் பலம். அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, பிரஜக்தா கோலி, தியா மிர்ஸா எனத் துணைக் கதாபாத்திரங்களின் பங்களிப்பிலும் நேர்த்தி.

Continue Reading…


Image of scene from the film Insidious: Out of the Further
Director:Jacob Chase
Cast:Amelia Eve, Island Austin, Lin Shaye, Sam Spruell, Brandon Perea, Maisie Richardson-Sellers, Joseph Lopez, Laura Gordon, Charli Penton, Taylor Bogrand

Insidious: Out of the Further

Horror, Thriller (English)

அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

Sun, August 23 2026

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்' (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்'. `தி ரெட் டோர்' படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி வேறொரு குடும்பத்தின் கதையைப் பேசுகிறது.

தாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பல் மருத்துவர் ஜெம்மா. அங்கே அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேற, மறைந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் எலிஸின் (Elise) ஆன்மாவின் உதவியுடன் தன்னைப் பற்றிய உண்மையை அறிகிறார். அதாவது ஆன்மாக்களின் உலகத்திற்கு (The Further) சென்று வருவது மட்டுமன்றி, நிஜ உலகத்திலிருந்து அங்கும், அங்கிருந்து நிஜ உலகிற்கும் எந்தப் பொருட்களையும் எடுத்துவரும் ‘கூரியர்’ (Courier) என்ற அபூர்வ சக்தி தனக்கு இருப்பதை உணர்கிறார் ஜெம்மா. அவரின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தி நிஜ உலகைக் கைப்பற்றத் துடிக்கும் அசுர ஆன்மாக்களிடமிருந்து ஜெம்மாவும் அவரது மகளும் தப்பித்தார்களா, அவர்களுக்கு எலிஸ் எப்படித் துணையாக நிற்கிறார் என்பதே திகில் நிறைந்த திரைக்கதை.

Continue Reading…


Image of scene from the film Bethlehem Kudumba Unit
Director:Girish A. D.
Cast:Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt, Shyam Mohan, Bindu Panicker, Roshan Shanavas, Srindaa, Shameer Khan
Writer:Girish A. D., Kiran Josey

Bethlehem Kudumba Unit

Romance, Comedy, Drama (Malayalam)

க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!

Fri, August 21 2026

இழப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் நாயகன், புதிதாக அந்த ஊருக்கு வரும் நாயகி, இவர்களுக்கு இடையே மலரும் உறவு, அங்குள்ள மனிதர்களிடையே வெளிப்படும் நகைச்சுவை தருணங்கள் என்பதாகத் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.

எர்ணாகுளத்தில் வசிக்கும் ஜஸ்டினின் (நிவின் பாலி) வீட்டுக்கு அருகே தன் குடும்பத்துடன் புதிதாகக் குடிவருகிறார் ஆஷ்லி (மமிதா பைஜு). அங்கே கேட்ரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டினை ஊரே மதிக்கிறது. அவருடைய சகோதரன் ஜோயல் (சங்கீத் பிரதாப்), ஒருபுறம் குறும்படம் எடுப்பதாக அலப்பறைகள் கொடுத்துவர, ஜஸ்டின் பொறுப்புடன் ஊருக்கு உதவுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஆஷ்லிக்கு ஜஸ்டினைப் பிடித்துப் போகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் 12-13 ஆண்டுகள் வயது வித்தியாசம் முதலில் ஜஸ்டினை யோசிக்க வைக்க, அவர்களின் காதலை ஊர் எப்படிப் பார்க்கிறது, ஜஸ்டின் என்ன முடிவெடுத்தார் என்பதை நல்லுணர்வுமிக்க காமெடி படமாகக் கொடுத்திருக்கிறார் `பிரேமலு’ புகழ் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.

Continue Reading…


Image of scene from the film The Legend of Karna

The Legend of Karna

Animation, Action & Adventure, Drama (Hindi)

Thu, August 13 2026

மகாபாரதத்தில் வரும் சூர்யபுத்திரன் கர்ணனை மையமாகக்கொண்டு, அவன் வாழ்க்கைப் பயணத்தைவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அனிமேஷன் வெப் தொடர்தான் இந்த ‘தி லெஜெண்ட் ஆஃப் கர்ணா’. சோனி லிவ் தளத்தில் அனிமேஷன் தொடராக வெளியாகியிருக்கிறது. கர்ணனின் வாழ்க்கையை மட்டுமே மையமாகவைத்து, அவரின் பார்வையில் நகரும் கதையமைப்பின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர முடிகிறது. குறிப்பாக, கர்ணனின் தனிப்பட்ட குணங்களையும், துரியோதனனுடனான நட்பையும் அதிகம் பேசுகிறது இந்தப் படைப்பு. பலமுறை எடுத்தாளப்பட்ட கதை என்பதால் அனிமேஷனில் புதியதோர் அனுபவம் தேவைப்படுகிறது. ஆனால், அது இங்கே சுத்தமாக மிஸ்ஸிங்! இரண்டு காட்சிகளை இணைக்கும் டிரான்சிஷன்களில்கூட ஆங்காங்கே சொதப்பியிருக்கிறார்கள். திரைக்கதையில் வேகம் காட்டி நகரும் காட்சிகள் சரியான கட்டமைப்பின்றி நகர்வதால் ஈர்க்க மறுக்கின்றன. இந்தச் சிக்கல்கள் அனைத்தும் நம்மைத் தொடருடன் ஒன்றவைக்க மறுக்கின்றன. அதேசமயம், பின்னணி இசை தேவையான காட்சிகளில் போர் முழுக்கமிட்டு வசீகரிக்கிறது. இன்னும் புதுமை தேவை கர்ணா!

Continue Reading…


Image of scene from the film The Devil's Mouth
Director:Jeff Wadlow
Cast:Kathryn Newton, Lana Condor, Nico Hiraga, Gavin Casalegno, Tommi Rose, Tayme Thapthimthong, Sahajak Boonthanakit, Harrison Luna
Writer:Aja Gabel, Myung Joh Wesner, Jeff Wadlow

The Devil's Mouth

Horror, Thriller (English)

OTT Corner

Thu, August 13 2026

விடுமுறையை ஜாலியாகக் கழிக்க, தாய்லாந்துக்குச் செல்லும் கல்லூரி நண்பர்கள் குழு, ‘தி டெவில்ஸ் மவுத்’ (The Devil’s Mouth) என்ற மர்மமான கடல் குகைக்குள் சிக்கிக்கொள்கிறது. வெளியேறும் வழி தெரியாமல் தவிக்கும் அவர்களை வெறியோடு துரத்துகிறது ராட்சத சுறா. இறுதியில் அவர்கள் உயிருடன் கரை சேர்ந்தார்களா என்பதே அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இந்த சர்வைவல் த்ரில்லரின் கதை. (தமிழ் டப்பிங் உண்டு). 106 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை ஜெஃப் வாட்லோ இயக்கியிருக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கேத்ரின் நியூட்டன், சுறா துரத்தும் காட்சியிலும், நண்பர்களுக்கு வழிகாட்டும் இடத்திலும் ஸ்கோர் செய்கிறார். துணைக் கதாபாத்திரங்களாக வரும் நண்பர்கள், சுறாவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கின்றன. ஆனால், பயமுறுத்தாத சுறாவின் VFX காட்சிகளும், யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸும் சறுக்கல்! இதே டெம்ப்ளேட்டில் நிறைய சாகசப் படங்கள் வந்துவிட்டதால் இந்த `டெவில்ஸ் மவுத்’துக்குள் விருப்பம் இருப்பவர்கள் செல்லலாம்.

Continue Reading…


Image of scene from the film Vadhandhi S02
Director:Andrew Louis
Cast:M. Sasikumar, Anagha, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, Arjun Nandhakumar
Writer:Andrew Louis

Vadhandhi S02

Mystery, Crime, Drama (Tamil)

Thu, August 13 2026

தண்டனை போஸ்ட்டிங் பெற்று மதுரையில் பணியாற்றுகிறார் காவல்துறை துணை ஆய்வாளர் மூசா ராசா (சசிகுமார்). எட்டுவழிச் சாலை அமைக்க மத்திய அரசு முற்பட, மாநில அரசு அதற்கு எதிர்ப்பு காட்ட, இருந்தபோதும் அரங்கேறுகிறது திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா. ஆனால், எதிர்பாராதவிதமாக, அதற்காகத் தோண்டப்படும் குழியில் எலும்புக்கூடு ஒன்று கிடைக்க, இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெறுகிறது. அந்த வழக்கை மூசாவிடம் ஒப்படைக்கிறார் காவல் உயரதிகாரி (அனகா). அதற்கான விசாரணையில் மணியின் (யஸ்வந்த்) கதை வெளிச்சத்துக்கு வர, உண்மையில் அந்தக் குற்றத்தைச் செய்தது யார் என்பதை அலசுகிறது இந்த அமேசான் பிரைம் தொடர். 2022-ம் ஆண்டு, எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான `வதந்தி’ தொடரின் இரண்டாவது சீசன் இது. ஆனால், இது தனிக்கதை என்பதால் முதல் சீசனைப் பார்த்திருக்கவேண்டிய அவசியமில்லை.

Continue Reading…


Latest Reviews

Image of scene from the film Pradhama Drishtiya Kuttakkar
FCG Rating for the film Pradhama Drishtiya Kuttakkar: 68/100
Pradhama Drishtiya Kuttakkar

Thriller, Drama (Malayalam)

Follows a woman constable who joins the police force through appointment after the death of her… (more)

Image of scene from the film About an Intimate Matter
About an Intimate Matter

Drama (Bengali)

Swarna is a dedicated high school science teacher who relocates to a conservative suburban town with… (more)

Image of scene from the film Khoriya
Khoriya

Drama (Nepali)

Two Nepali half-brothers run a poultry farm on the outskirts of a city. The older brother… (more)

Image of scene from the film Reporting Live
FCG Rating for the film Reporting Live: 36/100
Reporting Live

Crime, Thriller (Hindi)

A young reporter and her reluctant cameraman chase a story, only to get entangled in an… (more)